டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1 இல் ஒரு பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்து, அவர் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) உதவி ஆய்வாளர் வீரேந்திர சிங், உடனடியாக அவருக்கு CPR கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினார். இந்த உடனடி நடவடிக்கையால் பயணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
BIG salute to CISF man..
Passenger collapses at T1 Terminals of #DelhiAirport. Realizing situation CISF officer gave him CPR and saved his life till Medic team comes.#Humanity #Delhi #Life #DelhiRains #Sensex #GSTReform #viralvideo #tejran #Tollywood pic.twitter.com/yKGW31Pdct— ARMED FORCES (@ArmedForces_IND) September 4, 2025
பயணியின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது, மேலும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
