திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தேரடி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மது போதையில் ஒரு பெண் மிகவும் அட்ராசிட்டி செய்கிறார்.

அந்த பெண் அந்த வழியாக வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்திய நிலையில் போதை தலைக்கேறி என்ன செய்கிறோம் என்றே தெரியாத விதத்தில் நடந்து கெண்டார். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பிரபல தந்தி டிவி தங்களுடைய youtube பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“>

 

மேலும் அந்த பெண்ணை ஒரு வாலிபர் தடுக்க முயன்ற நிலையில் அவரிடமும் போக்கு காட்டி அந்தப் பெண் ரகளையில் ஈடுபட்டதால் சற்று நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.