ரயில்வே கேட்டை கடப்பதில் காட்டிய சில நொடிகள் அவசரம், லாரி ஓட்டுநருக்குப் பேராபத்தாய் முடிந்த நெஞ்சை உலுக்கும் விபத்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உலா வருகின்றன. அவற்றில் சில வேடிக்கையாகவும், சில விசித்திரமாகவும் இருக்கும். ஆனால், ஒரு சில வீடியோக்கள் பார்ப்பவர்களை அப்படியே உறைந்துபோகச் செய்துவிடும். அந்த வகையில், அதிவேகமாக வந்த ரயிலில் லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு ரயில்வே கேட் பகுதியில் வாகனங்கள் அலைமோதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அங்கிருந்த வாகன ஓட்டிகள் எப்படியாவது தங்களது வாகனத்தை முன்னால் கொண்டு செல்ல முயல்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒரு பெரிய லாரியின் ஓட்டுநர் எப்படியாவது ரயில் தண்டவாளத்தைக் கடந்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் லாரியை முன்னோக்கிச் செலுத்துகிறார்.
समझ नहीं आता लोगों को इतनी भी क्या जल्दी पड़ी है जो मौत के मुंह में खुद जा रहे हैं?
जान हथेली पर लिए घूमने वाले लोग पता नहीं बीमा कराकर आते हैं क्या? अरे भाई २ मिनट का सब्र नहीं है? अब हो गई न जल्दी? pic.twitter.com/4ua2MGFHXN
— Anuj Agnihotri Swatntra (@swatntra_anuj) May 22, 2026
லாரி தண்டவாளத்தின் நடுவே சிக்கிய அதே நேரத்தில், எதிரே ஒரு அதிவேக ரயில் வருவதைக் கண்டு, ரயிலின் லோகோ பைலட் (ஓட்டுநர்) தொடர்ந்து ஹார்ன் அடித்து அங்கிருந்தவர்களை எச்சரிக்க முயல்கிறார். ஆனால், அங்கு நிலவிய குழப்பத்தாலும், அவசரத்தாலும் லாரி ஓட்டுநரால் லாரியை மேலே நகர்த்த முடியவில்லை. அடுத்த சில நொடிகளில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த அதிவேக ரயில் லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
விபத்து நடந்த அடுத்த கணமே, அந்த இடமே கரும்புகை மற்றும் தூசியால் சூழ்ந்தது. ரயில் மோதிய வேகத்தில் லாரி சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்து காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது.
இந்தத் திகிலூட்டும் வீடியோ சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் @swatntra_anuj என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு பகிர்ந்து வருகின்றனர். மேலும், “ரயில்வே கேட்டுகளில் சில நொடிகள் பொறுமை காக்காததன் விளைவு இதுதான்; அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
