சபரிமலைக்குச் செல்பவர்கள் மாலை அணிந்து மிகவும் சுத்தமாக விரதம் இருப்பார்கள். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்த சில ஆண்கள், ஒரு ஹோட்டலில் அமர்ந்து அசைவ உணவை (கறி சோறு) சாப்பிடுகிறார்கள். இதைப் பார்த்த பலரும், “சாமிக்கு மாலை போட்டுவிட்டு இப்படிச் செய்யலாமா?” என்று சமூக வலைதளங்களில் கோபமாகத் திட்டி வருகிறார்கள்.
மலைக்கு மாலை….
போட்டுவிட்டு வயிறு நிறைய
சிக்கன்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/nHcDRWq2Yo— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Shaan77sun) January 11, 2026
இந்த வீடியோ இப்போது இண்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது. “பக்தி இருந்தால் ஒழுங்காக விரதம் இருங்கள், இல்லையென்றால் மாலை போடாதீர்கள்” என்று மக்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், இது உண்மையிலேயே நடந்ததா அல்லது யாராவது வேண்டுமென்றே இப்படிச் செய்கிறார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எது எப்படியோ, உண்மையான பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர்.
