சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தன்னைவிட 38 வயது இளையவரான 22 வயது வாலிபரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த ஜோடியைப் பார்த்து பலரும் மூக்கின் மேல் விரலை வைத்தாலும், அந்தப் பாட்டி சொன்ன விஷயம் தான் இன்னும் அதிரடியாக உள்ளது.

“இவர் தான் என் கணவர். எனக்கு 60 வயதாகிறது, இவருக்கு 22 வயது தான். எனக்கு இவரை நீண்ட நாட்களாகப் பிடிக்கும்” என்று அந்த மூதாட்டி கேமராவிற்கு முன் கெத்தாகப் பேசுகிறார்.

இதில் ஹைலைட் என்னவென்றால், இந்தத் திருமணத்திற்கு அந்தப் பாட்டியின் மகளே முழு சம்மதம் தெரிவித்தது தான். வீடியோவில் அருகில் இருக்கும் மகளும், “ஆமாம்.. இது என் அம்மா எடுத்த முடிவு, எனக்கு இதில் முழு சம்மதம்” என்று அசால்ட்டாகப் பேட்டி கொடுக்கிறார்.

“இருவரும் மேஜர் (Major), அவர்கள் விருப்பப்படி வாழ யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!” என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் பறக்கின்றன.