சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளிகள் சில நேரங்களில் நகைச்சுவையையும், சில நேரங்களில் துயரமான பாடங்களையும் நமக்கு வழங்குகின்றன. இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பரவிய ஒரு காணொளியில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், லாரியை ஓவர்டேக் செய்து முன்னால் வந்தவுடன், தனது வாகனத்தின் கைப்பிடிகளை விட்டுவிட்டு, இருக்கையின் மீது எழுந்து நிற்க முயற்சிக்கிறார். ஆனால், இந்த அபாயகரமான செயலின் விளைவாக, லாரியின் முன்பகுதி அவர் மீது மோத, அவர் கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்.
இந்தக் காணொளி, சாலையில் அஜாக்கிரதையாகவும், ஆபத்தான முறையில் சாகசங்கள் செய்ய முயல்வதன் விளைவுகளை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கி, பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் ஆபத்தான பைக் சாகசங்களை மேற்கொள்வதற்கு எதிரான ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
View this post on Instagram
