இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மற்றும் ஏடிஎம் மூலமாக மக்கள் அனைவரும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். வங்கிக்கு செல்வது மிகவும் அரிதாகி விட்ட நிலையில் மோசடி கும்பல் ஏடிஎம் பின் நம்பர் மற்றும் வங்கி சார்ந்த விவரங்களை திருடி அதன் மூலமாக பணத்தை திருடுகின்றனர். இது தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் மோசடி கும்பல் சமீபத்தில் ஏடிஎம் கார்டை insert செய்யும் இடத்தில் குளோனிங் என்ற இயந்திரத்தை பயன்படுத்துகிறார்கள்.

இதன் மூலமாக ஹேக்கர் உடனடியாக CVV மற்றும் சில விவரங்களை கைப்பற்றி நமக்கே தெரியாமல் நம்முடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகிறார்கள். எனவே ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும் எனவும் பாஸ்வேர்டை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாஸ்வேர்டை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவிடும் போது கைகளை மறைத்து வைத்துக் கொள்வது நல்லது.