பல ஆண்டுகளாக ‘பல்ஸ்’ (PACL) நிறுவனத்தில் பணத்தைப் போட்டுவிட்டு, ஏமாந்து போவோமோ என்ற கவலையில் இருந்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி லோதா குழு, தற்போது 80,000 ரூபாய் வரையிலான முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தரும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களின் வங்கித் கணக்குகளுக்கே நேரடியாகப் பணம் வரத் தொடங்கியுள்ளது.

​ஏற்கனவே 2019-ஆம் ஆண்டில் லோதா குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது அசல் ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்தப் பணம் வழங்கப்படுகிறது. தற்போது 80 ஆயிரம் வரை செட்டில்மெண்ட் நடக்கும் நிலையில், அடுத்தகட்டமாக 2 லட்சம் ரூபாய் வரையிலான கோரிக்கைகளை ஆய்வு செய்யக்குழு திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஸ்டேட்டஸை சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.