அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களை வைத்து மக்களை ஏமாற்றுவது, இன்றைய டிஜிட்டல் உலகில் மிகவும் ஆபத்தான ஒரு விஷயமாக மாறியுள்ளது.

உணவுக் குறைபாடு குறித்து ஸ்விக்கியில் பணத்தைத் திரும்பப் பெற ஒரு நபர் AI-ஆல் எடிட் செய்யப்பட்ட முட்டைகளின் புகைப்படத்தை அனுப்பிய சம்பவம் இதற்கு முன் வைரலானது. இப்போது, இதேபோல், ஒரு ஊழியர் தனது விடுமுறைக்காக AI கருவியான Gemini Nano-வைப் பயன்படுத்தி, தனது கையில் போலியான காயத்தை உருவாக்கி, அதை HR  பிரிவுக்கு அனுப்பி மருத்துவ விடுப்பு பெற்றுள்ளார்.

இந்தக் காயத்தின் ஆழம், நிறம், விளிம்புகள் யாவும் உண்மையானது போலவே இருந்ததால், HR. அதிகாரிகள் அதை உண்மையானதாகவே நம்பி எந்தக் கேள்வியும் கேட்காமல் விடுப்பை அங்கீகரித்துள்ளனர். HR அதிகாரியின் இந்தச் சரிபார்ப்பை AI எளிதாக ஏமாற்றிவிட்டது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

“>

சமூக வலைதளங்களில் இது குறித்து மக்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சட்ட அமைப்புகள் கூட உண்மைக்கும் போலிக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பதையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.