உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம்  தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் வைரலாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து ஒரு மாணவனுக்கு மாணவி ஒருவர் ‌ லிப் டு லிப் கிஸ் கொடுக்கிறார். இதனை சக மாணவர்  ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படியா பள்ளி வகுப்பறையில் முகம் சுழிக்க வைக்கும் செயலில் ஈடுபடுவது என்று பலரும் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பள்ளியில் நடந்ததா கல்லூரியில் நடந்ததா என்பது சரிவர தெரியாத நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.