மத்திய பிரதேச மாநிலம் கூனோ தேசிய பூங்காவிலிருந்து வெளியேறிய இரண்டு சிறுத்தைகள், முரைனா மாவட்டத்தில் உள்ள அட்டார் கிராமத்திற்குள் புகுந்து பீதியை கிளப்பியுள்ளன. கோதுமை அறுவடை நடந்து கொண்டிருக்கும் வயல்வெளிகளில் புகுந்த இந்த சிறுத்தைகள், அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகளை வேட்டையாட முயற்சி செய்தன. திடீரென சிறுத்தை பாய்வதைப் பார்த்த பெண் விவசாயிகள் அலறி அடித்து ஓடினர். ஆனால், அங்கிருந்த விவசாயிகள் சிலர் துணிச்சலாக சிறுத்தையைத் தடுத்து நிறுத்தினர்.
श्योपुर के कूनो नेशनल पार्क के चीते मुरैना तक दस्तक दे रहे हैं। दो चीते सबलगढ़ तहसील के अटार गांव में देखे गए। दोनों चीते शिकार की खोज में चंबल नदी किनारे बसे अटार गांव के खेतों तक पहुंच गए। खेतों में इस समय गेहूं की फसल कट रही है। जिन खेतों में फसल कट गई है, वहां किसान अपनी… pic.twitter.com/657Xi0Pxtr
— Lallu Ram (@lalluram_news) April 7, 2026
வைரலாகும் வீடியோவில், ஒரு விவசாயி வெறும் தடியுடன் சிறுத்தையை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்வதையும், இதைப் பார்த்து மிரண்டு போன சிறுத்தை வேட்டையை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடுவதையும் காணலாம். பூங்காவிலிருந்து சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் வருவது இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
