
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வருகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அவருக்கு அரசியல் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறிய நிலையில் அவருடைய முதல் மாநாடு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் விஜயின் முதல் மாநாடு நடைபெற்ற போது தன்னுடைய அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் அறிவித்து அரசியல் களத்தை அதிரவிட்டார்.
மீண்டும் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி வரும் என்று விஜய் கூறிவரும் நிலையில் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜயை ஏற்கனவே எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு பல செய்திகள் வரும் நிலையில் தற்போது சிவாஜி கணேசனுக்குஎம்ஜிஆர் காலகட்டத்தில் நடந்ததுதான் தற்போது அஜித்துக்கும் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு நிகராக சிவாஜி கணேசனுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். இதன் காரணமாக எம்ஜிஆர் அரசியல் கட்சியை தொடங்கிய போது சிவாஜி கணேசனுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.
இதே போன்று தான் தற்போது தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டிருக்கும் நிலையில் அஜித்துக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது எம்ஜிஆர் அரசியல் கட்சி தொடங்கியதால் சிவாஜி ரசிகர்களை ஈர்ப்பதற்காக அவருக்கு விருது வழங்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விஜய் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமைவார் என்று கூறப்படுவதால் அஜித்தை திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கல் பக்கம் இழுக்க போட்டி போடுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் அஜித்துக்கு விருது வழங்குவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் விஜய்க்கு எதிராக தான் அஜித்துக்கு விருது வழங்கியதாக கூறப்பட்டது. அதாவது அஜித் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அஜித்துக்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் அஜித் பத்ம விருது பெறுவதற்கு 100% தகுதியானவர். சிவாஜி கணேசனுக்கு அப்போது விருது வழங்கப்பட்ட நிலையில் எம்ஜிஆர் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடினார்.
அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில் அவரும் எம்ஜிஆர் போன்ற முதல் தேர்தலில் வெற்றிவாகை சூடி தமிழ்நாட்டின் முதல்வர் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் கடந்த 1977 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக முதல்முறையாக போட்டியிட்ட நிலையில் முதல் தேர்தலிலேயே எம்ஜிஆர் அபார வெற்றி பெற்றார். கட்சி தொடங்கிய முதல் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போதுஒருவேளை 1977 ஆம் ஆண்டு நடந்தது மீண்டும் 2026 இல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.