உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான தனுஷ் என்ற இளைஞர், தனது குடும்பத்தின் 70,000 ரூபாய் கடனை அடைப்பதற்காகவும், பொருளாதாரச் சுமையைச் சமாளிப்பதற்காகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவிற்கு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு வெல்லத் தயாரிப்பு ஆலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்த அவர், வழக்கம் போலப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
ஆலையில் பெரிய கொப்பரைகளில் பாகு கொதித்துக் கொண்டிருந்த நிலையில், அதன் அருகே நின்றுகொண்டிருந்தபோது அவருக்குத் திடீரெனத் தலைசுற்றல் ஏற்பட்டு நிலைதடுமாறி கொதிக்கும் வெல்லக் கொப்பரையில் விழுந்துள்ளார். கொதிக்கும் சூட்டில் இருந்து தப்பிக்க அவர் “எப்படியாவது காப்பாற்றுங்கள் அண்ணா” என்று கதறியழுத சத்தம் கேட்டு சக ஊழியர்கள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அங்கிருந்தவர்கள் அவரை வெளியில் மீட்டனர் என்றாலும், அவரது உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுத் தோல் உரிந்திருந்தது.
Maharashtra: Worker Falls Into Boiling Jaggery Vat at Plant
25-year-old Danish from Mudi village, Lakhimpur Kheri, was working at a jaggery plant in Madav Ganj, Pune district, when he reportedly lost his balance and fell into a boiling jaggery vat. Fellow workers pulled him out… pic.twitter.com/pWHMDE8854
— Deadly Kalesh (@Deadlykalesh) August 24, 2026
தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அவரது குடும்பத்தினரிடம் காட்டியதுடன், இது தொடர்பான சோகச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
