பாண்டா கரடிகளை அதிக அளவில் கொண்டுள்ள நாடு சீனா. அங்கு மிகவும் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இவை உள்ளது. இந்த நிலையில் சீனாவில் உள்ள தைசௌ உயிரியல் பூங்காவில் நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா கரடி என பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றி உள்ளது. சௌ சௌ என நாயை பாண்டா என நினைத்து தினம் தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். தங்களுடைய பூங்காவில் பாண்டா இல்லை என்பதால் இப்படி செய்ததாகவும் நாம் முடிக்கு டை அடிப்பது போல நாய்க்கு டை அடித்துள்ளோம் எனவும் கூறியுள்ளனர். இதனால் நாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.