உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் சர்தானா பகுதியில், சமூக வலைதளங்களில் ‘வைரல் ரீல்ஸ்’ எடுப்பதற்காக 17 வயது சிறுவனை அவரது நண்பனே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபஹீம் என்ற சிறுவனை விளையாடலாம் என்று அழைத்த அவரது நண்பன், வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஃபஹீம் பயந்து ஓடியும், கெஞ்சியும் கேட்காமல் அந்த நண்பன் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

​இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட ஃபஹீம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது உடலில் குண்டு பாய்ந்த நிலையிலும் மிகவும் சாதாரணமாகச் சிரித்தபடி, “என் நண்பன்தான் கூப்பிட்டான், அவனே என்னைச் சுட்டுவிட்டான்” என்று அவர் கூறியது பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்த நண்பனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.