நம் நாட்டின் கிராமப்புற அரசு மருத்துவமனைகளின் அவல நிலையும், ஏழை எளிய மக்களின் உயிர்களைத் துச்சமாக மதிக்கும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் எந்த அளவிற்கு ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே சிதைத்து விடுகிறது என்பதற்கு இந்த நெஞ்சைப் பிளக்கும் துயரச் சம்பவமே சாட்சியாக மாறியுள்ளது.
சரியான நேரத்தில் உரிய மருத்துவ உதவியும், அவசர ஆம்புலன்ஸ் வசதியும் கிடைக்காததால், 14 வயதே ஆன பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாகத் தன் உயிரை விட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியெடுத்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மூச்சு திணறல் மற்றும் வலியால் அவதிப்பட்ட அந்தச் சிறுமியை, அவளது பெற்றோர் பதறியடித்தபடி அருகில் உள்ள அரசு சமூக சுகாதார மையத்திற்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியின் நிலைமை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, அவளுக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்தும்படியும், மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தரும்படியும் மருத்துவமனை ஊழியர்களிடம் பெற்றோர் கதறி அழுது மீண்டும் மீண்டும் கெஞ்சியுள்ளனர். ஆனால், அங்கிருந்த ஊழியர்களோ எதையும் காதில் வாங்காமல் கல்நெஞ்சோடு அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. போதிய ஆக்சிஜன் சிலிண்டரும், ஆம்புலன்ஸ் போக்குவரத்தும் சரியான நேரத்தில் கிடைக்காமல், பெற்றோர் கண் முன்னே அந்தப் பிஞ்சு மகள் மூச்சுவிட முடியாமல் துடித்துடித்துப் பரிதாபமாகத் தன்னுயிரை விட்டாள்.
மக்களின் மரணத்தால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற குடும்பத்தினர், உள்ளூர் கிராம மக்கள் மருத்துவமனையை அதிரடியாக முற்றுகையிட்டு அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான போராட்டத்திலும், வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள்,மருந்துப் பொருட்கள், ஆம்புலன்சுகள் போன்ற அடிப்படை வசதிகள் நீண்ட காலமாகவே இல்லை என்று கிராம மக்கள் கொந்தளிப்புடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
तड़प-तड़पकर मासूम बच्ची ने तोड़ा दम, झारखंड में मां-बाप की आंखों के सामने तड़पकर 14 साल की छात्रा ने तोड़ा दम !!
गुमला में सिस्टम की बलि चढ़ी छात्रा! न मिली एंबुलेंस, न ऑक्सीजन, अस्पताल की घोर लापरवाही!
गुमला में सीएचसी (CHC) की शर्मनाक लापरवाही ने एक छात्रा की जान ले ली,… pic.twitter.com/SyaWJTYywH
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) July 15, 2026
“>
இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்பது குறித்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர். தங்களின் ஒரே மகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கனவு கண்ட பெற்றோரின் அழுகுரல் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
