இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, தனது 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை விட கிரிக்கெட் போட்டிக்கே முக்கியத்துவம் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 2026 ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்ற அவர், அதன் தொடர்ச்சியாக டி.ஒய் பாட்டீல் டி20 லீக் போட்டியில் அதிரடி காட்டினார்.
இப்போட்டியில் வெறும் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 58 ரன்களைக் குவித்து, தனது திறமையை நிரூபித்துள்ளார். தேர்வை எழுதாமல் மைதானத்தில் இறங்கிய அவரது முடிவு சரியானது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அதிரடி ஆட்டம் அமைந்தது.
தேர்வு எழுத வராதது குறித்துப் பேசிய பள்ளி முதல்வர், வைபவ் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தும் விளையாட்டின் காரணமாக வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய வைபவின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, “என் மகன் படிப்பில் கெட்டிக்காரன் தான், ஒவ்வொரு பாடத்திலும் 90 சதவீதத்திற்கு மேல் எடுக்கும் திறன் கொண்டவன்.
बेहद संवेदनशील
दमोह में नाबालिग लड़का को आरोपी ने हथोड़े मारकर मांस खाया और खूंन पीता रहा।
बहिन के घर भाई दूज पर टीका लगवाने जा रहा है रास्ते में मानसिक विक्षप्त गुड्डा पटेल ने घटना को अंजाम दिया। pic.twitter.com/jdn43KQWtW— Uma Shankar Patel (@ASKUMASHANKAR) March 6, 2026
“>
ஆனால், தற்போது அவனது முழுக் கவனமும் கிரிக்கெட்டில் உள்ளது. தேர்வை விட அவனுக்கு இப்போது கிரிக்கெட் தான் முக்கியம்” என்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கனவு மற்றும் கிரிக்கெட் வாழ்விற்காக ஒரு மாணவன் தனது பொதுத்தேர்வைத் தியாகம் செய்தது தற்போது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
