குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு கடந்த 11ஆம் தேதி ஆபீஸ் ரூமில் வைத்து மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயம் அடைந்த வாலிபர் பெயர் கார்த்திக் என்றும் அவர் அங்கு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது இந்த மாணவர் அந்த பயிற்சி மையத்தில் படிக்கும் ஒரு மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். அந்தப் பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட்.

அவருக்கு தன் மகளுடன் வாலிபர் போனில் பேசுவது தெரியவந்துள்ளது. இதனால் கோபத்தில் அவர் பயிற்சி மையத்திற்கு அதுபற்றி விசாரிக்க சென்றுள்ளார். அவர்களுக்குள் உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெகதீஷ் வாலிபரை குத்தி விட்டார். அவர் வாலிபரை பலமுறை கத்தியால் குத்திய நிலையில் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் உடனடியாக தலையிட்டு அவரை தடுத்தார். பின்னர் கார்த்திகை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.