காதலில் தோல்வியடைந்து, ஐந்து நாட்களாக உணவருந்தாமல் இருந்த மகனின் நிலையை கண்டு தாங்க முடியாத ஒரு தந்தை, தன் மகனுக்காக அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்ற உருக்கமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேக்கப் அல்லது காதல் தோல்வி என்பது இன்றைய இளைஞர்களிடையே பொதுவான ஒன்றாக மாறிவிட்டாலும், சில சமயங்களில் அது அவர்களின் உயிரையே அச்சுறுத்தும் அளவிற்கு தீவிரமாகிவிடுகிறது.

இந்த நிலையில், தன் மகன் பட்டினியாகக் கிடந்து வாடுவதைப் பொறுக்காத தந்தை, அவனது காதலைச் சேர்த்து வைக்க தானே நேரடியாகக் களம் இறங்கியுள்ளார். இந்தத் தந்தையின் விசித்திரமான மற்றும் பாசப் போராட்டம் குறித்த செய்தி வெளியானதும், சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

மேலும் பல நெட்டிசன்கள் தந்தையின் இந்தச் செயலைப் பாராட்டி, “மகனின் உயிரைக் காப்பாற்றவும் அவனது மகிழ்ச்சிக்காகவும் ஒரு தந்தை எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு இதுவே உண்மையான உதாரணம்” என்று நெகிழ்ச்சியோடு கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், “பிள்ளைகளின் இத்தகைய தனிப்பட்ட விஷயங்களில் பெற்றோர்கள் தலையிடுவது அவர்களின் சுயமரியாதையைப் பாதிக்கும்” என்று ஒரு சில விமர்சகர்கள் மாற்றுக்கருத்தையும் முன்வைத்துள்ளனர்.