அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது பேட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள செங்கோட்டையன் பேசியதாவது, நான் அதிமுக கட்சியில் கடந்த 1972 ஆம் ஆண்டு கிளை செயலாளராக சேர்ந்த போது 1975 ஆம் ஆண்டு என்னை பொருளாளராக நியமித்த அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்.

கடந்த 1977ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் நான் போட்டியிட்ட போது எம்ஜிஆர் என்னிடம் என்னுடைய பெயரை உச்சரி நீ வெற்றி பெறுவாய் என்று கூறினார். எஸ்டி சோமசுந்தரம், கோவை செழியன் போன்ற அதிமுகவிலிருந்து விலகிய போது அவர்களது இல்லத்திற்கே சென்று தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி அதிமுகவில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கூறினேன் என்றார். மேலும் இதன் மூலம் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் காலத்தில் கட்சியில் தனது எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்பதை செங்கோட்டையன் சுட்டிக்காட்டி உள்ளார்.