பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கேசரியா பகுதியில், குடும்பத் தகராறில் மருமகளே மாமனாரைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ராமநாத் சகானி என்பவர் மாற்றுத்திறனாளி மற்றும் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர். இவரது மகன் லட்டு சகானிக்கும், மனைவி குஷ்புவுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு இருந்ததால், குஷ்பு தனது குழந்தைகளை விட்டுவிட்டுத் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது இரண்டு மகன்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல குஷ்பு மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், பேரக்குழந்தைகளை அனுப்ப மாமனார் மறுப்புத் தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற குஷ்பு, அங்கிருந்த செங்கல்லை எடுத்து மாமனாரின் பிறப்புறுப்பில் ஓங்கித் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த ராமநாத், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய மருமகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.