புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரசாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் சீமான் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு திரண்டிருந்த தமிழக வெற்றி கழக (தவெக) தொண்டர்கள் திடீரென ‘டிவிகே.. டிவிகே..’ என முழக்கமிட்டனர்.
இதனால் கடும் கோபமடைந்த சீமான், தனது பிரசார வாகனத்திலிருந்தே அவர்களை நோக்கி, “டீ விக்கிறியா? இங்க வந்து டீ வித்துட்டு போடா” என்று ஆவேசமாகச் சாடினார்.
சீமான் பேசும்போது TVK, TVKஎன கத்திய இளைஞர்; நாம் தமிழர் கட்சியினர் செய்த சம்பவம்#Seeman | #NTK | #TVK | #TVKVijay | #Puducherry | #ElectionWithPT | #Election2026 pic.twitter.com/K03PJTwlxx
— PttvOnlinenews (@PttvNewsX) April 6, 2026
தொடர்ந்து பேசிய சீமான், தனது தம்பிகள் (நாம் தமிழர் கட்சியினர்) அனைவரும் அறிவார்ந்த பிள்ளைகள் என்றும், அங்கு கோஷமிட்டவர்கள் வெறும் ‘தற்குறிகள்’ மற்றும் ‘கோமாளிகள்’ என்றும் கடுமையாக விமர்சித்தார்.
சீமானின் இந்தப் பேச்சால் அங்கு இருந்த நாம் தமிழர் கட்சியினருக்கும், தவெக தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றது.
போலீஸார் தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தாலும், தேர்தல் பிரசாரத்தில் இரு கட்சித் தொண்டர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சீமானின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
