
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது, கத்திரிக்காய் என்று தாளில் எழுதினால் பயன் கிடைக்காது நிலத்தில் இறங்கி விதை போட்டு செடியாக்கி தண்ணீர் விட வேண்டும். தேர்தல் வியூகம் என்ற நோய் சமீப காலமாக வந்துவிட்டது. தமிழ்நாட்டைப் பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும். எந்தெந்த பகுதியில் எத்தனை சமூகங்கள் இருக்கிறது எத்தனை ஆறுகள் குளங்கள் இருக்கிறது போன்றவைகள் பற்றி அவருக்கு தெரியுமா.? தமிழ்நாட்டில் என்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது பற்றி அவருக்கு தெரியுமா.? இது போன்ற தேர்தல் வியூகங்கள் பணக்கொழுப்பு இருப்பவர்களுக்கு மட்டும்தான் தேவைப்படும்.
அதைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள். என்னிடம் காசு தான் இல்லை மூளை இருக்கிறது என்றார். தமிழகத்தில் காமராஜர், அண்ணா ஆகியோர் தேர்தல் வியூக வகுப்பாளர்களை வைத்துதான் ஆட்சி செய்தார்களா.? தமிழ்நாட்டில் எதை செய்தால் சரியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசியல் செய்ய முடியும் என்று அவர் விஜயை மறைமுகமாக சாடினார். மேலும் தைப்பூசத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு முருகன் மாநாடு நடத்திய அவருக்கு ஒருவேளை வாக்குகள் இல்லை போல என்று கூறினார்.