விஜய் பிரசாந்த் கிஷோர் சந்திப்பை பணக்கொழுப்பு என்று விமர்சனம் செய்த சீமானுக்கு தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “நடைமுறை அரசியல் எதார்த்தம் சீமானுக்கு புரியவில்லை. சமகால சமூக சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பது அவசியம்  ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை.

திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை  நீட்டி விட்டால் சீமான் எதையாவது உளறுவதை தான் வழக்கமாகக் கொண்டுள்ளார். நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம். நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.