பெங்களூருவைச் சேர்ந்த பங்கஜ் எனும் மென்பொருள் நிபுணர், அலுவலகத்தில் மேலதிகாரியிடம் சிக்காமல் இருப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வினோதமான கருவியைக் கண்டுபிடித்துள்ளார். அலுவலக நேரத்தில் நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது மேலதிகாரியிடம் பிடிபட்ட பங்கஜ், அதற்கு ஒரு தீர்வாக இந்த AI கேமரா சிஸ்டத்தை உருவாக்கியுள்ளார். இந்த சாதனம் அவரது இருக்கையை நோக்கி யாராவது வருவதைக் கண்டறிந்தால், கணினித் திரையை உடனடியாக நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து வேலை செய்யும் குறியீட்டுத் தளத்திற்கு (Code Editor) தானாகவே மாற்றிவிடும்.
my boss caught me watching netflix in office. so i built a device that detects him and automatically switches my screen to work 👨💻
while i'm watching netflix, the ai device monitors people around my desk in real time. If my boss comes, it switches my screen to my code editor.… pic.twitter.com/pgyScR96sx
— Pankaj (@the2ndfloorguy) January 29, 2026
இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாம் ஒரு வாரத்திலேயே ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ (Stranger Things) தொடரின் அனைத்துப் பாகங்களையும் எவ்வித இடையூறுமின்றி பார்த்து முடித்ததாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகின்றன. பொறியியல் மற்றும் படைப்பாற்றலை இதுபோன்ற வேடிக்கையான விஷயங்களுக்குப் பயன்படுத்துவதை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், பணியிடத்தில் இத்தகைய முறைகேடுகள் ஆபத்தானவை என்ற விவாதத்தையும் இந்தச் சம்பவம் கிளப்பியுள்ளது.
