சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர் எத்தகைய கல் நெஞ்சக்காரராக இருந்தாலும் அவர்களைக் கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தான் நீண்ட நாட்களாகப் பாசத்துடன் வளர்த்து வந்த பசுமாட்டைச் சில காரணங்களால் மற்றொருவருக்கு விற்பனை செய்துள்ளார். வாங்கியவர்கள் அந்தப் பசுவை அழைத்துச் செல்ல முயன்றபோது, அது அவர்களுடன் செல்ல மறுத்துப் பிடிவாதம் பிடித்தது. ஒருகட்டத்தில் கயிற்றை மீறி ஓடி வந்த அந்தப் பசு, தன் பழைய உரிமையாளரின் காலடியில் மண்டியிட்டு, தன்னை விட்டுவிடாதீர்கள் என்று கெஞ்சுவது போலத் தலையை வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The Cow Turned back and
begged its owner not sell her 🐮 pic.twitter.com/fNv5DMGgrW
— अक्स (@Vickyaarya007_) February 4, 2026
வாயில்லா ஜீவன்கள் மனிதர்கள் மீது வைத்துள்ள உண்மையான அன்பிற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. அந்தப் பசுவின் செய்கையைக் கண்டு அங்கிருந்தவர்களும், அதன் உரிமையாளரும் ஒரு நிமிடம் நிலைகுலைந்து போயினர். இந்த உருக்கமான காட்சி தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. “விலங்குகளுக்குப் பேசத் தெரியாது என்பதால் அவற்றுக்கு உணர்வுகள் இல்லை என்று அர்த்தமல்ல” என நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மனிதர்களுக்கிடையிலான உறவுகளே கசந்து வரும் இந்தக் காலத்தில், ஒரு பசுவின் இந்த அன்புப் போராட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
