தளபதி விஜய் நடித்த புதிய கீதை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் பிரபலமடைந்தவர் தான் அமிஷா படேல். பாலிவுட் பிரபல நடிகையான இவர் 50 வயதாகியும் இதுவரை திருமணம் செய்யவில்லை. இது தொடர்பாக அவர் பேட்டியளித்தபோது, திருமணம் செய்தால் திரைத்துறையை விட்டு விட்டு வீட்டில் சமையல் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்.

எனினும் எனக்கு பொருத்தமான நடிகர் இன்னும் என் பக்கத்தில் வந்ததில்லை. இதற்கிடையில் திருமணம் செய்ய வரும் வாலிபர்கள் அனைவரும் என்னை விட பாதி வயசு பசங்களாக இருக்கின்றனர். என்னுடைய தொழில் வாழ்க்கைக்காக நான் அதிகம் இழந்து விட்டேன்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக எனக்கு ஒரு நபருடன் உறவு இருந்தது. அவர் மும்பையை சேர்ந்த பெரிய தொழில்துறை குடும்பத்தை சேர்ந்தவராவார். இருப்பினும் நான் திரைத்துறையில் நுழைய முடிவு செய்தபோது காதலை விட தொழிலை தேர்ந்தெடுத்தேன். தற்போது எனக்கான ஒருவரை கண்டுபிடிக்கும் வரை திருமணத்திற்கு காத்திருக்கிறேன் என அமிஷா படேல் தெரிவித்துள்ளார்.