பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஃபாத்திமா சனா, மகிழ்ச்சியையும் நெகிழ்வையும் வெளிப்படுத்தியுள்ளார். “நான் கேப்டன் பொறுப்பு பெற்றவுடன், தோனியைப் போல ஆள வேண்டும் என என்னுள் எண்ணம் வந்தது” என தெரிவித்துள்ளார்.

எம்எஸ் தோனியின் மைதான மேலாண்மை, அமைதியான நடைமுறை, மற்றும் சக வீரர்களை நம்பிக்கையுடன் வழிநடத்தும் பாணி ஆகியவை தான் அவரை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும், “அவரை போலத்தான் நான் என் அணியையும் வழிநடத்த விரும்புகிறேன்” என்றும் ஃபாத்திமா கூறியுள்ளார்.

இந்த உருக்கமான கருத்து பாக்., கிரிக்கெட் ரசிகர்களிடையே மட்டுமல்லாது, இந்திய ரசிகர்களிடையே கூட பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. ‘தோனி’ என்ற பெயர் எல்லை தாண்டி எங்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.