தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே மீனவ கிராமத்தைச் சேர்ந்த சமய ரித்திக் என்ற மாணவர் விபத்தில் சிக்கினார். இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சமய ரித்திக் வீல் சேரில் வந்து 12-ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதினார்.

அந்த மாணவர் 600-க்கு 565 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து அந்த மாணவர் கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு உதவிய பலருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். இவர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தேர்வை எழுத முடியாமல் தவறவிட்டார்.