மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, மும்பை அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா போல்ட் ஆனதைக் கண்டு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடும் கோபமடைந்தார். பெவிலியனில் அமர்ந்திருந்த ரோஹித், திலக் வர்மா அவுட்டான விதத்தைப் பார்த்து விரக்தியில் கத்தியதோடு, ஆக்ரோஷமான வார்த்தைகளைப் பயன்படுத்தியது கேமராவில் சிக்கியது.
Rohit Sharma’s sad reaction when Tilak Varma got out.😢🥺 pic.twitter.com/I7NznKN8s9
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) May 10, 2026
“>
மேலும் திலக் வர்மாவின் விக்கெட்டை மும்பை அணி ஒரு பெரும் பின்னடைவாகக் கருதியதே ரோஹித்தின் இந்த ஆவேசமான நிலைக்குக் காரணமாக அமைந்தது. வழக்கமாக நிதானமாகச் செயல்படும் ரோஹித், ஒரு முக்கியமான கட்டத்தில் இளம் வீரர் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததைக் கண்டு தனது கோபத்தை வெளிப்படுத்திய விதம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
