
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் கோயில் திருவிழாவை முன்னிட்டு அந்த கிராம மக்கள் அம்மனுக்கு ஆதார் வடிவில் பேனர் ஒன்றை அடித்து வழிபாடு நடத்தி உள்ளார்கள். பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில் காளியம்மன், பகவதி அம்மன் கோவில்.
இந்த கோவில் திருவிழா ஆனது நடைபெற்றதையொட்டி அம்மனுக்கு ஆதார் கார்டு போன்று வடிவமைக்கப்பட்ட பேனரை அந்த கிராம மக்கள் சார்பாக நிறுவப்பட்டிருந்தது. மேலும் திரளான பக்தர்கள் வந்தும் பக்தியோடு சாமி தரிசனம் செய்துள்ளனர்.