நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு நடைபெற்ற போது விஜய் திமுக மற்றும் பாஜக கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். இந்த நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் கோவைக்கு சென்று மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அவர் மருத்துவர்கள், ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களிடம் பேசினார். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அவர்களை கனிவாக நடத்தி மருத்துவம் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்புக்கு தயாரான அமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
செய்தியாளர்களை சந்திப்பதற்காக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைக் வைக்கும் டேபிளின் மேல் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கொடியை போலவே ஒரு துணி போடப்பட்டிருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அந்த துணியை உடனடியாக எடுக்குமாறு கூறினர். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி போலவே இருக்கும் அந்த துணியை உருவி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பான காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
