
பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு இளைஞன் தனது காதலியை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியில் வசித்து வருபவர் சன்னு ராம். 5 மாதங்களுக்கு முன்பு தன் காதலித்த பெண்ணான பூஜா உடன் சண்டையிட இருவரும் பிரிந்துள்ளனர். இதை எடுத்து பெண்ணின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வர, ஆத்திரமடைந்த சன்னு, பூஜாவை நான்தான் திருமணம் செய்து கொள்வேன். வேறு யாருக்கும் கொடுக்க மாட்டேன் என மிரட்டி வந்துள்ளான்.
பூஜாவின் தாயார், பயத்தில் தனது மகளை பாட்டியின் வீட்டிற்கு அனுப்பி பாதுகாத்து வந்துள்ளார். நீண்ட நாளாக காத்திருந்த சன்னு, நேற்று வீட்டில் தனியாக பூஜா இருப்பதை அறிந்து, தனது நண்பர்களுடன் வீட்டின் பின்பக்கம் வழியாக நுழைந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளான்.