தமிழ் சினிமாவில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நகைச்சுவை கலைஞராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சார்லி. இவரின் உண்மையான பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். இவரின் இந்த பெயர் சினிமாவிற்கு சரியாக வராது என கே பாலச்சந்தர் சார்லி என்ற இவருக்கு பெயர் மாற்றம் செய்து வைத்தார். அதன் பிறகு தமிழில் சுமார் 800 திரைப்படங்களில் நடித்துள்ள சார்லி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும் போது நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பாலசுந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தான் இவர் சார்லி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரையும் சினிமா பக்கம் திருப்பாமல் நன்றாக படிக்க வைத்து தற்போது இருவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர். 63 வயதாகும் சார்லி என்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.