தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லிவிங்ஸ்டண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் திரைக்கதையும் எழுதியுள்ளார். குறிப்பாக இவர் நடித்த சுந்தர புருஷன், சொல்லாமலே மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த பல கசப்பான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது பாக்கியராஜ் இடம் இயக்குனராக சேர அவரின் வீட்டின் முன்பு தினமும் நின்றதாகவும்,உதவி இயக்குனராக சேர வேண்டும் என்றால் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று பாக்கியராஜ் கூறியதாகவும் கூறினார். அவர் சொன்னது போல நானும் காத்திருந்த நிலையில் ஒரு கட்டத்தில் தனது அப்பாவுக்கும் எனக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது இறுதியாக பாக்கியராஜ் சாரிடம் வாய்ப்பு கேட்கலாம் அவர் இல்லை என்று கூறிவிட்டால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவரை சந்திக்க சென்றேன். உடனே பாக்கியராஜ் சார் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார் என்று லிவிங்ஸ்டன் உருக்கமாக பேசியுள்ளார்.