சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், கடைக்காரரிடம் தெரியாமல் இந்திய ரூபாய் நோட்டைத் தந்துள்ளார். அந்த நோட்டை வாங்கிய கடைக்காரர், அதன் நிறத்தையும் வடிவத்தையும் பார்த்து வியந்துபோய் வேலையையே நிறுத்திவிட்டு அதையே உற்றுப் பார்க்கத் தொடங்கினார்.
வாடிக்கையாளர் மீண்டும் பாகிஸ்தான் நோட்டைத் தர முயன்றபோதும், அதை மறுத்த கடைக்காரர் தனக்கு அந்த இந்திய நோட்டே வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அந்த நோட்டில் இருப்பவர் யார் என்று கேட்டபோது, தான் படிக்காதவன் என்பதால் தனக்குத் தெரியாது என்று அவர் நேர்மையாகக் கூறினார்.
அப்போது அங்கிருந்த ஒரு சிறுவன், இது இந்திய ரூபாய் நோட்டு என்றும் இதில் இருப்பவர் மகாத்மா காந்தி என்றும் விளக்கினான். இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கடைக்காரர், அந்த இந்திய நோட்டை மிகவும் பொக்கிஷமாகத் தனது பையினுள் போட்டுக்கொண்டார்.
வாடிக்கையாளரிடம் வேறு பணம் வாங்காமலேயே அவருக்குரிய பொருட்களைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.
View this post on Instagram
“>
எல்லாவற்றையும் மறந்து ஒரு சாதாரண ரூபாய் நோட்டை வியப்புடன் பார்த்த அந்த கடைக்காரரின் வெள்ளை உள்ளம் மற்றும் மனிதாபிமானத்தைச் சமூக வலைதளவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
