மக்கள் சக்தி பெற்ற அதிமுகவிற்கு எந்த ஒரு சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எதிரிகள் மற்றும் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை அசைத்துப் பார்த்து விட முடியாது. அதனால் அதிமுகவுக்கு எந்த சேதாரமும் ஏற்படாது. ஏனென்றால் மக்களால் நான் மக்களுக்காகவே நான், உங்களால் நான் உங்களுக்காக நான் என்பதை தாரக மந்திரமாக கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டு வந்தார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு வடிவமாக தான் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.

மாபெரும் தியாக வேள்வியை அவர் நடத்திக் கொண்டிருக்கின்றார். மக்களுடைய சக்தி தான் மகத்தான சக்தி. மக்களுடைய சக்தி தான் ஒரு இயக்கத்திற்கான எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். அதிமுகவிற்கு தற்போது தற்காலிகமாக வந்து கொண்டிருக்க கூடிய சோதனைகள் அனைத்தையும் தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அதிமுகவிற்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் மலர செய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி உழைத்துக் கொண்டிருக்கிறார். இது சோதனை காலம் என யாரும் சோர்ந்து விட வேண்டாம் என்று ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார்.