
தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அவர் கூறியதாவது, திமுகவை அகற்றுவது தான் எங்கள் கொள்கை. எங்களுக்கு வேறு யாரும் எதிரி அல்ல. எந்த கட்சியும் எதிரி அல்ல. அதிமுகவை பொறுத்தவரை வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். பாஜகவை பார்த்து நாங்கள் நடுங்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் எங்களை விட்டு போக வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. நீங்களாகத்தான் போனீங்க. எங்கள் மீது பழி சுமத்தி பயனில்லை. சீனியர் என்கிறீர்கள்? 2001-ஆம் ஆண்டில் தான் நீங்கள் எம்எல்ஏ. நான் 1989-ஆம் ஆண்டு எம்எல்ஏ. அதிமுக மூழ்கும் கப்பல் கிடையாது. கரைசேரும் கப்பல். இதில் வந்தவர்கள் கரையேரலாம். ஏறாதவர்கள் நடுக்கடலில் போகலாம் என கூறியுள்ளார்.