விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஓரினச்சேர்க்கை உறவுகள் ஒரு வகையான வக்கிரம் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதல் இயற்கைக்கு எதிரானது என கோவையில் நடந்த கல்லூரி நிகழ்வு ஒன்றில் அவர் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் கூறியது, அவர்களுக்கு வருத்தம் அளித்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அரசியல் கட்சியில் திருநங்கைகளுக்கு என அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பு விசிகவுக்கே உண்டு என்று அவர் பெருமைப்பட்டுள்ளார். மேலும் எல் ஜி பி டி க்யூ+ தோழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக விசிக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
