
எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். படிப்பு மட்டும்தான் யாரும் திருடமுடியாத நிலையான சொத்து என மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார். மதுரையில் பேசிய அவர், கல்வியில் தமிழகம் முதலிடம் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது . ‘இதுவரை இவ்வளவு பெரிய தொகையில் எங்கும் செயல்படுத்தாத திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்’ ‘கலைஞர் நூலகத்தை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் பன்முக ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு உருவாக்கித்தரும் அனைத்து வாய்ப்புகளையும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படிப்பை மட்டுமே நோக்கமாகக்கொண்டு செயல்பட வேண்டும்’ என்றார்.