மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. மொத்தமுள்ள 264 இடங்களில் 207 தொகுதிகளைக் கைப்பற்றி மெகா வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி இன்று (மே 9) மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் சுவேந்து அதிகாரி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் முறைகேடு புகார்கள் எழுந்தபோதிலும், ஆளுநர் சட்டசபையைக் கலைத்ததைத் தொடர்ந்து இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
VIDEO | Kolkata: Governor RN Ravi administers the oath of office to Kshudiram Tudu as Cabinet Minister of West Bengal.
Source: Third Party
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/te8eyL5jeS
— Press Trust of India (@PTI_News) May 9, 2026
சுவேந்து அதிகாரியுடன் திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், அசோக் கீர்த்தனியா, குதிராம் துடு மற்றும் நிசித் பிரமாணிக் ஆகிய ஐந்து அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். இவர்களில் ராணிபந்த் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குதிராம் துடு, தனது தாய்மொழியான ‘சந்தாலி’ மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒரு ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், சுமார் 52,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
