மத்திய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட திருத்த மசோதாவிற்குத் தமிழகச் சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தொடர்ச்சியான மற்றும் பலத்த எதிர்ப்பின் எதிரொலியாக, தற்போது அந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு முன்வந்துள்ளது.
மத்திய அரசின் புதிய எப்சிஆர்ஏ மசோதாவால் மாநில உரிமைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, தமிழகச் சட்டப்பேரவையில் இதற்குக் கண்டனம் தெரிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் சார்பில் எழுப்பப்பட்ட இந்தச் வலுவான எதிர்ப்புக் குரல் டெல்லி வரை சென்று சேர்ந்ததுடன், மத்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
தொடர் எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக, அவசரமாக நிறைவேற்றப்படவிருந்த இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த மத்திய அரசு தற்போது இறங்கி வந்துள்ளது.
எதிர்த்தது தமிழ்நாடு… பணிந்தது மத்திய அரசு! 🔥
மத்திய அரசை எதிர்க்கவில்லை என்று சொல்பவர்கள் கவனிக்கட்டும்! சட்டப்பேரவையில் #FCRA மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் அண்ணன் விஜய் கொண்டு வந்த தீர்மானம் டெல்லி வரை எதிரொலித்துள்ளது. ⚡
தமிழ்நாட்டின் பலத்த எதிர்ப்பை அடுத்து, FCRA… pic.twitter.com/SDc5WS1WZL
— மித்திரன் சதீஸ் (@SATISH122104) August 11, 2026
“>
மக்களின் உரிமைகள் மற்றும் மாநிலத்தின் நலன் சார்ந்த விவகாரங்களில் தமிழகம் தொடர்ந்து தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதும், அதன் மூலம் உரிய மாற்றங்களைப் பெறச் செய்வதும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
