தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், மகளிர் அணிக்கு 11 புதிய மாநில அளவிலான நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். கட்சியில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி:

அதன் படி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்ற 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

புதிய நிர்வாகிகளை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், தவெக-வின் மகளிர் படையின் செயல்பாடுகளையும் விஜய் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கட்சியின் மகளிர் அணியினரின் பணிகள் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு சவாலாக (சிம்ம சொப்பனமாக) விளங்குவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.