இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், ஒரு பெண் அப்பளப்பூவை விசித்திரமான முறையில் பொறிப்பது பார்ப்பவர்களை சிரிக்க வைத்து வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், பெண் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்குகிறார், ஆனால் எண்ணெய் கையில் படும் என்ற அச்சத்தால், அப்பளப்பூவை வெள்ளை நூலால் கட்டி, அதை எண்ணெயில் மூழ்கடிக்கிறார். இந்த யோசனை முறையால் எந்த சிதறலும் இன்றி அப்பளம் வதக்கப்படுகிறது. அவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியும், அந்த விந்தையான யோசனையும் பார்க்க காமெடி போல உள்ளது. “radhikamaroo” என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 12 மில்லியனுக்கும் மேல் பார்வைகளையும், 1.4 லட்சத்திற்கும் மேல் லைக்களையும் பெற்றுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் “மாஸ்டர் செஃப் விருதுக்கு தகுதியானவர்” என்றும், “அவரது மாமியார் இதைப் பார்த்து இன்னும் ICU-வில் இருக்கலாம்” என்றும் கிண்டல் செய்துள்ளனர். இந்த விசித்திரமான யோசனை, அனைவரையும் சிரிக்க வைத்து, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
