2021 சட்டமன்றத் தேர்தலில் சில எட்டப்பர்கள் இருந்த காரணத்தினால், அதிமுக ஆளும் பாக்கியத்தை இழந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எட்டப்பர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும், அதிமுகவை காட்டிக்கொடுக்கிறவர்கள்.

அதிமுக தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கட்சியிலேயே இருந்து ஊடுருவி பல்வேறு இடையூறுகளை உண்டு பண்ணியவர்கள்தான் எட்டப்பர்கள் என்றார். மேலும், திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றார்.