தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விசிக-வுக்கு வந்த மாற்று அரசியல் ஆபர்கள் மற்றும் முதலமைச்சர் பதவி குறித்த அதிரடி ரகசியங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். தேர்தல் முடிவுக்குப் பின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது, மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தவெக ஆட்சி அமைக்க வழிவிடுவோம், நாம் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று அவர் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்குப் பிறகு அதிமுக அணியும், தங்களது அணியும் சேர்ந்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற ஒரு ரகசிய ப்ரோபோசல் வந்ததாகக் கூறி திருமா அதிர வைத்துள்ளார். ​அந்த ப்ரோபோசலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிந்ததாகவும், ஆனால் அது திமுக-வுக்கே ஆபத்தாக முடியும் என்பதால் தாம் உடனே அதை மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, தன்னை முதலமைச்சராகவும், எடப்பாடி பழனிசாமி மற்றும் இருவரை துணை முதலமைச்சராகவும் போட அதிமுக தரப்பில் பேசிக்கொள்வதாகத் தகவல் வந்ததாகவும், அதைத் தான் சிரித்துக்கொண்டே ஃபன்னியாகக் கடந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெறும் இரண்டு இடங்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் நாற்காலிக்கு மனக்கோட்டை கட்ட தான் விரும்பவில்லை என திருமாவளவன் ஓப்பனாக உடைத்துப் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.