2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தனது வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், திமுக அரசின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம், சொத்து வரி மற்றும் இதர கட்டணங்களை, முந்தைய அதிமுக ஆட்சியின் கட்டணங்களோடு ஒப்பிட்டு விரிவான டிஜிட்டல் பிரசாரத்தை மாநிலம் முழுவதும் முன்னெடுக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட உள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, சமூக வலைதளங்கள் வாயிலாக இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்களைச் சென்றடையும் வகையில் ‘வரி உயர்வு ஒப்பீடு’ அட்டவணைகளை வெளியிடுவது குறித்தும், பூத் கமிட்டி பணிகளை முடுக்கிவிடுவது குறித்தும் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
மேலும், தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பான மாவட்ட வாரியான கள நிலவரங்களை எடப்பாடி பழனிசாமி கேட்டறிய உள்ளார்.
