தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.பி. ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்குமாறு இடதுசாரி கட்சிகளையும் திமுக வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Exclusive | “DMK wanted AIADMK to form the government,” claims CPI(M) leader M.A. Baby ( @MABABYCPIM )#MABaby #CPM #DMK #AIADMK #TamilNaduPolitics @PreetiChoudhry pic.twitter.com/56CiJfaozU
— IndiaToday (@IndiaToday) May 8, 2026
இருப்பினும், கொள்கை ரீதியாக திமுகவின் இந்த நிலைப்பாட்டை இடதுசாரி கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிமுகவிற்கு திமுக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அது தேவையற்ற அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் எனக் கருதிய கம்யூனிஸ்ட் கட்சிகள், அந்த முயற்சி நடப்பதற்கு முன்பே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முடிவெடுத்ததாக அவர் விளக்கியுள்ளார். திராவிடக் கட்சிகளின் இந்த ரகசியத் திட்டத்தைத் முறியடிக்கவே தவெக பக்கம் தாங்கள் சாய்ந்ததாக அவர் கூறியிருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
