அமெரிக்காவில் வருடத்திற்கு 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1 பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களில் முதுகலை பட்டதாரிகளுக்கு இதில் 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 65,000 விசாக்கள் குழுக்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் எச்1 பி விசா தொடர்பாக எஸ்1 பி மனுக்கள்  மற்றும் மறுப்பு விகிதம் என்னும் தலைப்பில் அமெரிக்க கொள்கைகளுக்கான நேஷனல் பவுண்டேஷன் என்னும் ஆராய்ச்சி அமைப்பானது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, குறைந்த வருடாந்திர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் எஸ்1 பி விசாக்களுக்கு பெரும் எண்ணிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக அமெரிக்காவிற்கு வெளியே வேலை மற்றும் ஆட்களை அனுப்புவதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக திறமையுள்ள பலர் அமெரிக்கா வந்து பணியாற்ற முடியவில்லை. மேலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.