கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கிய உக்ரைன்- ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது அடுத்த ஆண்டு (2024) ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பதால், அந்நாட்டு அரசு மிக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனையடுத்து இப்போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) செய்து வருகிறது.

இவ்வாறு நிகழ்ந்தால் உக்ரைன் நாடு புறக்கணிப்பதாக எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் ரஷியாவை இந்த போட்டியில் அனுமதிப்பதை எதிர்த்து பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. மேலும்  இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்பட 40 நாடுகள் ஒன்றிணைந்து பாரீஸ் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என போலந்து விளையாட்டு மந்திரி கூறியுள்ளார். அதன்படி போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் கூட்டாக  அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ‘ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தால் மற்ற நாட்டு  வீரர்கள் நெருக்கடிக்குள்ளாவார்கள். மேலும் உக்ரைன் போரை திசைதிருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும்’ என குறிப்பிட்டுள்ளது.